
தமிழர் குடிகள் (சாதிகளை) ஆரியர்கள் உருவாக்கினார்கள் என்பது அறியாமை! தமிழர் குடிகளிடையே (சாதிகளிடையே ) ஏற்ற தாழ்வை உருவாக்க மனுஸ்மிருதியையும், அந்த ஏற்ற தாழ்வை நம்ப வைக்க வைதீக மதத்தையும் கட்டமைத்த வேலைதான் ஆரியனுடையது பின்னர், வெள்ளையர்களும், பிராமணர்களும், திராவிடமும் சேர்ந்து அந்த ஏற்ற தாழ்வை பட்டியல் முறைக்கு கொண்டு வந்து சட்டமாக்கி விட்டனர்.
தமிழ் சாதிகள் எத்தனை?
தமிழ்நாட்டில், மக்கள் தொகை கணக்கில் மிக. அதிகமாக உள்ள, பரதவர், தேவர், தேவேந்திரர், வன்னியர், பறையர், கவுண்டர், நாடார், கோணார், முத்தரையர் போன்ற சாதிகளும்,
மக்கள் தொகை கணக்கில் சற்று குறைவாக உள்ள முதலியார், (தமிழ்)நாயக்கர், உடையார், ஆசாரி, போன்ற சாதிகளும், மக்கள் தொகை கணக்கில் மிக குறைவாக உள்ள, செட்டியார், பிள்ளை, பண்டாரம், குயவர், வண்ணார் நாவிதர், போன்ற சாதிகளும், இன்னும் சில மலைவாழ் மக்களைக் கொண்ட சாதிகளும் சேர்த்து கிட்டத்தட்ட 150 சாதியினர் வாழ்வதாக தெரிகிறது. இந்த 150 தமிழ் சாதியினரையும் சேர்த்து சமார் 6 கோடிக்கும் மேல் தமிழ் மக்கள் இருந்தும் இவர்களிடம் போதுமான ஒற்றுமை இல்லை என்பது மட்டுமல்ல.. பெரும் எண்ணிக்கையில் உள்ள, தேவர்களுக்கும், தேவேந்திரர்களுக்கும் காங்கிரஸ் ஆட்சியிலும், வன்னியர்களுக்கும், பறையர்களுக்கும் திராவிட ஆட்சியிலும் பகை வளர்க்கப்பட்டதால்...கடந்த காலங்களில், தமிழ் நாட்டின் அரசியல் தலைமை, ஆட்சி அதிகாரம், கலை, இலக்கியம், தொழில், பெரு வணிகம் எல்லாம் தமிழரல்லாதவர்களிடம் சிக்கி விட்டது.
எம்.எல்.ஏ., எம்,பி, க்களாக பெரும்பாலோர் , ரெட்டியார், நாயுடு, ராஜூ போன்ற தெலுங்கு சாதியினராக உள்ளதை இப்போதுதான் தமிழ் இளைஞர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் சிறு பான்மையினரான தெலுங்கர்களைக் கொண்ட ஒரு அரசியல் தலைமையை உருவாக்கத்தான் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்துள்ளது என்பதையும் புரிந்து கொண்டு வருகின்றனர். தேசிய கட்சிகள், பிராமண லாபியையும், திராவிட கட்சிகள், தெலுங்கு லாபியையும் உருவாக்கி வளர்ப்பதையும் பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டின் கனி வளங்களை வேட்டையாடி வரும் கார்ப்பரேட்டுகளுக்கு உதவி செய்வதில்...
தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் தமிழ் இளைஞர்கள் தெரிந்துதான் வைத்திருக்கின்றனர். இதை யெல்லாம் மனதில் கொண்டு,தமிழ் சாதிகளின் கூட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
அந்த கூட்டமைப்பு, பல்வேறு தமிழ் சாதி நபர்களைக் கொண்ட கூட்டமைப்பாகத்தான் தெரிகிறதேயொழிய, பல்வேறு சாதி மக்களின் கூட்டமைப்பாக தெரிய வில்லை.
மக்களை திரட்டுங்கள்!
ஒவ்வொரு சாதி இளைஞர்களும் தங்கள் சாதி இளைஞர்களை தங்கள் சாதியினருக்கான, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வாழ்வாதாரம் போன்ற அரசியல் உரிமைகளுக்காக திரட்டி அமைப்பாக்குங்கள். அந்த வேலகளை செய்து கொண்டுதான் தமிழ்சாதியினருக்கான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!
அப்படி, தங்கள் சாதியினருக்காகவும், ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் இணைந்து வேலை செய்தால்... தமிழர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை எந்த நாயாலும் தடுக்க முடியாது எனது கருத்து, தமிழ் சாதியின் ஒன்று பட்டு போராட வில்லையென்றால்..
தமிழ்நாடு சோமாலியா ஆவதையும், தமிழர்கள், உலகின் பிற பூர்வ குடியினரைப் போல அழிந்து படப் போவதையும் எந்த கடவுளாலும் காப்பற்ற முடியாது.
உடனடியாக செய்ய வேண்டியது!
சரியான தமிழ் சாதிகளின் எத்தனை என்பதையும், ஒவ்வொரு சாதியினரும் தமிழ்மக்கள் தொகையில் எத்தனை. சதவீதம் என்பதையும், கணக்கெடுத்து அந்த சதவீத அடிப்படையில் கல்வி, வேலை, தொழில் வாய்ப்புகள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பது நமது கொள்கை முழக்கமாக வேண்டும்.
இதன் மூலம் தமிழர்களிடையே படிநிலையை வலியுறுத்தும் FC, BC, MBC, SC, என்ற பட்டியலை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு, ஏற்ற தாழ்வற்ற தமிழ் சமூகத்தை உருவாக்க முடியும்.
-பாவல் சங்கர்
Your email address will not be published. Required fields are marked *